கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதித்துள்ள நாடுகள் - மீறினால் சிறை, அபராதம்
கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதித்துள்ள நாடுகள் குறித்து பார்க்கலாம்.
கிறிஸ்துமஸ்
உலகளவில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாக கிறிஸ்துவ மதம் உள்ளது. உலக மக்கள் தொகையில் சுமார் 30% பேர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸை உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது முக்கிய பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், கிறிஸ்துமஸ் கொண்டாட சில நாடுகள் தடை விதித்துள்ளது.
வட கொரியா
கடுமையான கட்டுப்பாடுகளை உடைய நாடான வட கொரியாவில், மதங்களை பொறுத்தவரை கம்யூனிச நாடாகவும், நாத்திக அரசாகவும் அறியப்படுகிறது.

அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைகளை தடை செய்வதாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
அதற்கு மாறாக கிறிஸ்துமஸிற்கு முந்தைய தினம், கிம் ஜாங் உன் தாயாரின் பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சோமாலியா
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டின் இஸ்லாமிய நம்பிக்கையை அச்சுறுத்துலாக உள்ளதாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு தடை விதித்தது.

சோமாலியாவில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்குமாறு காவல்துறை, மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புருனே
தென்கிழக்கு ஆசிய நாடான புருனே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை பாதிக்கும் எனக்கூறி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தடை விதித்தது.
தடையை மீறி கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது.
சிலுவைகள் போன்ற மத அடையாளங்களைப் பயன்படுத்துவது, மெழுகுவர்த்திகளை ஏற்றுவது, கிறிஸ்துமஸ் மரங்களை வைப்பது, மதப் பாடல்களைப் பாடுவது, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அனுப்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
தஜிகிஸ்தான்
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடு ஆகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் அல்லது பிற கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தஜிகிஸ்தானின் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று பட்டாசு வெடித்தல், சிறப்பு உணவுகள், பரிசுகள் வழங்குதல் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா
இஸ்லாத்தின் தாயகமாக கருதப்படும் சவுதி அரேபியா, பிற மத பண்டிகைகளை கொண்டாட அனுமதிப்பதில்லை.

பொது இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டவர்கள் ரகசியமாக கொண்டாடிக்கொள்ளலாம்.
பிரித்தானியா
பிரித்தானியாவில், உள்நாட்டு போரின் போது முதலாம் சார்லஸ் மன்னரை தூக்கிலிட்ட பிறகு, ஆட்சி செய்த ஆலிவர் குரோம்வெல்லின் பியூரிட்டன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தடை விதித்தார்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த தடையை ஏற்க மறுத்தனர். குரோம்வெல்லின் மரணத்திற்கு பின்னர் மீண்டும் மன்னராட்சி வந்த நிலையில், 1660 ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.
அமெரிக்கா
இதே போல், 1957 ஆம் ஆண்டில் அமெரிக்காவை ஆண்ட பியூரிடன்கள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தடை விதித்தனர். ஆனால், 1689 ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |