உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் பிறந்த 2026 புத்தாண்டு - கடைசியாக எந்த நாட்டில்?
உலகில் முதலாவதாக, கிரிபாட்டி தீவில் 2026 ஆம் ஆண்டு பிறந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு முடிவடைந்து, புதிதாக வரப்போகும் 2026 ஆம் ஆண்டை வரவேற்க உலக மக்கள் தயாராகி வருகின்றனர்.
க்ரிபான்டி தீவில் பிறந்த 2026
புது வருட முதல் நாளில் வழிபாட்டு தளங்கள் செல்வது, கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது என தங்களுக்கு விருப்பமான வழிகளில் புத்தாண்டை வரவேற்பார்கள்.

பெரும்பாலும் கடற்கரைகளில் மக்கள் மொத்தமாக கூடி புத்தாண்டை வரவேற்பார்கள், இதனால் நள்ளிரவில் கடற்கரைகள் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகளில் முதலாவதாகவும், சில நாடுகளில் தாமதமாகவும் புத்தாண்டு பிறக்கிறது.
அந்த வகையில், உலகில் முதலாவதாக, மத்திய பசுபிக் கடல் பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு (Christmas Island) என அழைக்கப்படும் கிரிபாட்டி தீவில் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்துள்ளது.

இலங்கை நேரப்படி 8:30 மணி நேரத்துக்கு முன்பும், கிரீன்விச் சராசரி நேரத்துக்கு 14 மணி நேரத்துக்கு முன்பும் அங்கு புத்தாண்டு பிறந்துள்ளது.
அதைத்தொடர்ந்து, முதல் நாடாக நியூசிலாந்தின் சாதம் தீவுகளில் இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30க்கு புத்தாண்டு பிறந்தது.
இந்தியாவும், இலங்கையும் 12 மணிக்கு புத்தாண்டை தொடங்குகிறது. பிரித்தானியாவில், காலை 5;30 மணிக்கும், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் காலை 10;30 மணிக்கும் புத்தாண்டு பிறக்கிறது.

உலகில் கடைசியாக, சமோவா தீவில் நாளை மாலை 4;30 மணிக்குதான் புத்தாண்டு தொடங்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |