ஒரு இந்தியர் கூட வாழாத நாடு எது தெரியுமா? வெளியான விவரங்கள்
பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வசித்து வரும் நிலையில் ஒரு இந்தியர் கூட வசிக்காத நாடுகளை பற்றி பார்க்கலாம்.
வேலையின் காரணமாகவும், படிப்புக்காகவும் வெளிநாடுகளில் இந்தியர்கள் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால், அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியர்கள் ஒருவர் கூட வாழாத நாடுகளும் இருக்கின்றன.
வாடிகன் நகரம் (Vatican City)
0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் வாடிகன் சிட்டியில் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் மக்கள் வசிக்கின்றனர்.
இந்த நாட்டின் மக்கள் தொகை மிக குறைவு. ஆனால், இந்த நாட்டில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமான விடயம்.
சான் மரினோ (San Marino)
சான் மரினோ ஒரு குடியரசு நாடாகும். இந்த நாட்டின் மக்கள் தொகை என்பது 3 லட்சத்து 35 ஆயிரத்து 620 ஆகும்.
இந்த நாட்டிலும் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை. சுற்றுலா பயணிகள் என்ற பெயரில் தான் நாம் இந்தியரை இங்கு காண முடியும்.
பல்கேரியா (Bulgaria)
தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பல்கேரியா (Bulgaria) நாட்டில் கிறிஸ்தவர்கள் தான் அதிகமாக வசிக்கின்றனர்.
இந்த நாட்டின் மக்கள் தொகை 2019 -ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 69,51,482 ஆகும். இந்த நாட்டிலும் ஒரு இந்தியர் கூட குடியேறவில்லை.
துவாலு (எல்லிஸ் தீவுகள்) Ellis Island
உலகில் எல்லிஸ் தீவுகள் என்று துவாலு அழைக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் இந்த நாடு அமைந்துள்ளது. சு
மார் 10 ஆயிரம் பேர் வாழும் இந்த நாட்டில் ஒரு இந்தியர் கூட இல்லை. இந்த தீவில் 8 கிமீ நீள சாலைகள் மட்டும் தான் உள்ளன.
பாகிஸ்தான் (Pakistan)
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு இந்தியர்கள் கூட குடியேறவில்லை. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் மற்றும் பொருளாதார பிரச்சனை காரணமாக ஒரு இந்தியர்கள் கூட அங்கு வசிக்கவில்லை.
இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்து.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |