பாம்புகளை விவசாயம் செய்யும் ஒரே ஒரு அதிசய நாடு.., எது தெரியுமா?
உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் மர்மங்கள் நிறைந்த உயிரினங்களில் ஒன்று பாம்பு.
இந்த விஷ உயிரினம் உலகின் பல புராணங்களிலும், மதக் கதைகளிலும் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.
பாம்புகளை பார்த்தால் நடுக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில நாடுகளில் பாம்புகளை விவசாயம் செய்து வளர்கின்றன.
அந்தவகையில், பாம்புகளை விவசாயம் செய்யும் நாடு வியட்நாம், அங்கு ட்ரை ராச் டோங் டாமில்(Triac Dong Tam) பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.
ட்ரை ராச் டோங் டாமில்(Triac Dong Tam), ஆண் மற்றும் பெண் பாம்புகளுக்கு ஒரு சரியான சூழல் வழங்கப்படுவதால் அதிக முட்டையிடுகின்றன.
இந்த இடம் பாம்புகளின் தோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பாம்பு வளர்ப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த பண்ணையில் 400 க்கும் மேற்பட்ட வகையான விஷ பாம்புகள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
மேலும் அவற்றின் விஷங்கள் மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமான டோங் டாம்(Triac Dong Tam) பாம்புப் பண்ணையை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |