உலகளவில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் நாடு; எவ்வளவு தெரியுமா?
இவ்வுலகில் பல உலோகங்கள் காணப்படுகிறது. அதில் தங்கத்திற்கு இன்று வரையில் ஓர் மதிப்பு இருக்க தான் செய்கிறது.
அந்தவகையில் உலகளவில் தங்கத்தை அதிகளவில் வைத்திருக்கும் நாடு எது என்று குறித்து பார்க்கலாம்.
அதிக தங்கத்தை வைத்திருக்கும் நாடு
உலகிலேயே யாரிடம் அதிகளவில் தங்கம் இருக்கிறதோ அவர்கள் தான் பணக்காரர்களாக அறிப்படுகின்றார்கள். பழைய காலத்தில் இருந்தே தங்கமும், நிலமும் மிகப்பெரும் முதலீடாக இருகின்றது.
பொதுவாகவே அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் என இரண்டு வகை இருகின்றது. அதில் தங்கம் என்பது அசையும் சொத்தாகும். தங்கத்திற்கான மதிப்பு எப்போதும் உயர்வாக தான் இருக்கும்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, அதிகளவிலாக தங்கம் அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு 8,133.46 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக ஜேர்மனியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இங்கு 3,352.65 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தாக இத்தாலியில் காணப்படுகிறது. இங்கு மட்டும் சுமார் 2,451.84 டன் தங்கம் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆண்டில் வெளியான ஓர் அறிக்கையில், சுமார் 50,000 டன் தங்கம் பூமியில் புதைந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு கண்டறிந்தது.
பூமியில் இருந்து இதுவரை 1,90,000 டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 20% தங்கம் நிலத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுரங்களிலும் அதிக அளவில் தங்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மிகப் பெரிய அளவிலான தங்க சுரங்கத்தை வைத்திருக்கும் நாடாக சீனா காணப்படுகிறது.
மேலும் கனடா, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகளிலும் தங்க சுரங்கங்களில் இருந்து தங்கம் எடுக்கப்படுகிறது.
நெவாடாவில் இருக்கும் தங்கச் சுரங்கங்கள் பேரிக் கோல்டு நிறுவனத்திற்கு சொந்தமானவை. இது தான் உலகின் மிகப்பெரிய சுரங்கமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த இடத்தில் மட்டும் ஆண்டுக்கு 3.5 மில்லியன் அவுன்ஸ் தங்கம் வெட்டி எடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |