உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் முதலிடம் பிடித்தது எந்த நாடு தெரியுமா?
உலகின் தலைசிறந்த விமான நிலையங்கள் குறித்த விவரங்கள் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
உலகின் தலைசிறந்த விமான நிலையங்கள்
பிரிட்டனில் செயல்பட்டு வருவது ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனமானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் நூற்றுக்கணக்கான விமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிறுவனமானது உலகம் முழுவதும் உள்ள 565 விமான நிலையங்களில் பயணிகளிடம் சேவை குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் உலகின் தலைசிறந்த விமான நிலைய உணவு, விமான நிலைய கழிவறை, ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையம் ஆகிய விருதுகளை குவித்து சாங்கி விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதில் இரண்டாவது இடத்தில் டோஹா விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ விமான நிலையமும் உள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவானது நேற்று முன்தினம் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்றது. இந்த பட்டியலில் இந்தியாவின் 4 விமான நிலையங்கள் முதல் 100 இடங்களில் உள்ளது.
அதாவது, டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் 32வது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 48வது இடத்திலும், ஐதராபாத் 56வது இடத்திலும், மும்பை விமான நிலையம் 76வது இடத்திலும் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |