பிரபல முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ள இந்திய நகரம் எது தெரியுமா? ஆனால் மும்பை அல்ல
இந்த இந்திய நகரம் சொத்து விலை வளர்ச்சியின் அடிப்படையில் பிரபல முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ளது.
எந்த நகரம்?
Knight Frank-ன் Q2 2025 பிரைம் குளோபல் சிட்டீஸ் இன்டெக்ஸ் (PGCI) படி, பிரைம் சொத்து விலை வளர்ச்சியின் அடிப்படையில் பெங்களூரு பிரபல முதலீட்டு மையமாக உலகளவில் 4வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. மும்பை 6வது இடத்திலும், டெல்லி மிகவும் பின்தங்கி 15வது இடத்திலும் உள்ளது.
உலகளவில் 46 முக்கிய நகரங்களில் பிரதான குடியிருப்பு சொத்து விலைகளை PGCI அறிக்கையானது கண்காணிக்கிறது.
இந்த அறிக்கை பெங்களூரு நகரமானது, பிரதான சொத்து விலைகளில் ஆண்டுக்கு ஆண்டு 10.2% உயர்வைக் கண்டதாகக் காட்டுகிறது. அதேபோல, மும்பை 8.7% உயர்வையும், டெல்லி 3.9% உயர்வையும் கொண்டிருந்தது.
காரணங்கள்
* முதலாவதாக, பெங்களூருவில் எண்ணற்ற உலகளாவிய ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன. அதேபோல 13,000 க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் உள்ளன.
இங்கு பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் இங்கு இடம்பெயர்கிறார்கள். இது வணிக மற்றும் குடியிருப்பு இடங்களின் தேவையை அதிகரிக்கிறது.
* இரண்டாவதாக, மெட்ரோ விரிவாக்கம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களும் பெங்களூருவுக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளன.
வெளிப்புற ரிங் ரோடு (ORR), மற்றும் கட்டுமானத்தில் உள்ள பெரிஃபெரல் ரிங் ரோடு (PRR) நகரம் முழுவதும் இணைப்பை மேம்படுத்துகின்றன.
* மூன்றாவதாக, முதலீட்டில் அதிக வருமானத்தை அளிக்கிறது. உலகளவில், பிரதான சொத்து விலைகளில் சராசரி ஆண்டு வளர்ச்சி 3.5% இலிருந்து 2.3% ஆகக் குறைந்துள்ளது.
* நான்காவதாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ளது. போக்குவரத்து பிரச்சனையை தவிர வாழ்வதற்கு ஒரு சிறந்த இடம் பெங்களூருவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |