Most Powerful Passport: எந்த நாட்டின் பாஸ்போர்ட் அதிக பலனுடையது!
எந்த நாட்டின் பாஸ்போர்ட்டில் அதிக பலன் என்பது குறித்து ஆய்வின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
4 வகையான பாஸ்போர்ட்
நாம் உலகின் எந்த நாட்டிற்கு சென்றாலும் பாஸ்போர்ட் ( கடவுசீட்டு) இருந்தால் தான் போக முடியும். இதற்கு ஒரு சில நாடுகள் விதிவிலக்கு அளித்திருந்தாலும் பெரும்பாலான நாடுகள் அதை முக்கியமாக பார்க்கிறது.
இந்த பாஸ்போர்ட்டில் நான்கு வகைகள் உள்ளன. அவை, சாதாரண மக்கள் பயன்படுத்தும் ஆர்டினரி பாஸ்போர்ட், அரசு ஊழியர்கள், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பயன்படுத்தும் பாஸ்போர்ட் (Diplomatic) , துறை சார்ந்த பாஸ்போர்ட் (Official), வியாபார ரீதியாக வெளிநாடு செல்பவர்களின் பாஸ்போர்ட் (Jumbo) ஆகியவை உள்ளன.
எந்த பாஸ்போர்ட்டில் அதிக பலன் உள்ளது?
லண்டனைச் சேர்ந்த ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் எந்த நாட்டின் பாஸ்போர்ட் அதிக பலனுடையது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அளித்துள்ள தரவுகளில், உலகத்தில் 227 இடங்களுக்கு செல்ல பாஸ்போர்ட் கட்டாயம். சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. அதை பயன்படுத்தி 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜேர்மன் பாஸ்போர்ட் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதனை பயன்படுத்தி 190 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
மூன்றாவது இடத்தில் ஆஸ்திரியா, பின்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், லக்ஸம்பர்க், சுவீடன், தென்கொரியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது. இதனை பயன்படுத்தி 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
நான்காவது இடத்தில் லண்டன், டென்மார்க், நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது. இதனை பயன்படுத்தி 188 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
ஐந்தாவது இடத்தில் கனடா, பெல்ஜியம், மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுக்கல், அவுஸ்திரேலியா செக்குடியரசு உள்ளிட்ட நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது. இதனை பயன்படுத்தி 186 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
அந்தவகையில், இந்தியாவின் கடவுச்சீட்டு 80 ஆவது இடத்தில் உள்ளது. இதனை பயன்படுத்தி 57 இடங்களுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்லலாம்.
கடைசி இடமான 103 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளது. இதனை பயன்படுத்தி 27 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |