இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்?
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே FTA ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்தியாவில் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பங்கேற்க வருகின்றனர்.

credits : John Thys/AFP via Getty Images
இந்தியா - ஐரோப்பா FTA
இந்த வருகையின் போது, பல வருடங்களாக இழுபறியாக இருந்த இந்தியா - ஐரோப்பா இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA - Free Trade Agreement) ஒப்பந்தம் வரும் ஜூன் 27 ஆம் திகதி கையெழுத்தாக உள்ளது.
இது உலகின் மிகப்பெரிய FTA ஒப்பந்தமாக கருதப்படும் நிலையில், உலகின் 25% மக்கள்தொகையை பிரதிநிதித்துவம் செய்ய உள்ளது.

Credit : AA | Indian Press Information Bureau / Handout ©
அமெரிக்கா உலக நாடுகளின் மீது வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இறுதியாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், சுங்கவரி அல்லது இறக்குமதி வரிகள் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படுவதன் மூலம், 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சந்தை அணுகலை எளிதாக்கி இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பம், மருந்துகள், ஆட்டோமொபைல்கள், ஜவுளி, எஃகு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மின் இயந்திரங்கள், ஆடைகள் போன்ற துறைகளுக்கு இந்த ஒப்பந்தம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதிகள் தற்போது EU இல் 12–16% வரிகளை எதிர்கொள்கின்றன.
ஐரோப்பிய நாடுகளின் மானிய விலை விவசாயப் பொருட்கள் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், விவசாயம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதே போல், இந்தியாவிற்கு விமானம் மற்றும் பாகங்கள், மின் இயந்திரங்கள், வைரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆதாயமடையும்.
அறிவுசார் சொத்து, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் வணிக சேவைகள் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் சேவை இந்தியாவில் விரிவடையும்.
2024–25 ஆம் ஆண்டில் EU உடனான இந்தியாவின் வர்த்தகம் 75.85 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி மற்றும் 60.68 பில்லியன் டொலர்கள் இறக்குமதி உட்பட இருதரப்பு வர்த்தகம் 136.53 பில்லியன் டொலர்களாக உள்ளது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 17% பங்களிக்கிறது. அதே வேளையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு ஏற்றுமதியில் இந்தியா சுமார் 9% பங்கு வகிக்கிறது. சுமார் 6,000 ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |