இந்தியாவில் தங்கம் அதிகமாக உள்ள மாநிலம் எது? அதுவும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான்
இந்தியாவில் மிகப்பெரிய தங்க வளம் இருக்கும் மாநிலம் எது என்பதையும், எவ்வளவு தங்க கையிருப்பு உள்ளது என்பதை பற்றியும் பார்க்கலாம்.
இந்திய மாநிலம்
இந்திய மாநிலமான பீகாரில் தான் அதிகமான தங்கம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த மாநிலத்தில் மண்ணுக்கு அடியில் நிறைய தங்கம் புதைந்து கிடக்கிறது.
தேசிய கனிம இருப்பு தரவுகளின்படியும், 1.4.2015 நிலவரப்படியும், இந்தியாவில் தங்கத் தாதுவின் மொத்த அளவு 501.83 மில்லியன் டன்கள் ஆகும். இதில், 17.22 மில்லியன் டன்கள் இருப்பு வகையிலும், 484.61 மில்லியன் டன்கள் வள வகையிலும் உள்ளன.
அதன்படி, இந்தியாவில் தங்க தாதுக்கள் பீகார் மாநிலத்தில் தான் 44 சதவீதம் உள்ளது. இதற்கு அடுத்த படியாக ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
எந்த மாவட்டம்?
பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் மாவட்டம், சோனோ பிளாக் பகுதியில் இருக்கும் கரமாட்டியாவில் இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு நடத்திய போது தான், மிகப்பெரிய தங்க வளம் அங்கு இருப்பது தெரியவந்தது.
இந்த ஆய்வின் படி, ஜமுய் மாவட்டத்தில் 37.6 டன் கனிம மயமாக்கப்பட்ட தாது உட்பட 222.88 மில்லியன் டன் தங்கம் உள்ளது. இது, இந்தியாவில் உள்ள தங்க இருப்பில் 44 சதவீதம் ஆகும்.
இதனடிப்படையில், இந்தியாவின் மிகப் பெரிய தங்கக் கையிருப்பு அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி பெறுவது குறித்து பீகார் அரசு பரிசீலித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |