நாய்களை அனுமதிக்காத ஒரே இந்திய மாநிலம்.., எது தெரியுமா?
36 சிறிய தீவுகளால் ஆன லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64,000 மட்டுமே.
மொத்தம் 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள லட்சத்தீவு மக்கள் தொகையில் 96 சதவிகிதம் முஸ்லிம்கள் ஆவர்.
மற்ற நான்கு சதவிகிதம் இந்து, பௌத்த மற்றும் பிற மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.
லட்சத்தீவில் 36 தீவுகள் இருந்தாலும், அவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.
இதில் கவரட்டி, அகத்தி, அமினி, காட்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் தீவு ஆகியவை அடங்கும்.
இவற்றில் பல தீவுகளில் 100க்கும் குறைவான மக்களே வாழ்கின்றனர் என்பது ஆச்சரியமான ஒன்று.
நாட்டிலேயே பாம்புகள் இல்லாத ஒரே மாநிலம் இதுதான். மேலும், இங்கு நாய்கள் கூட காணப்படுவதில்லையாம்.
லட்சத்தீவு நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக தங்கள் தீவை வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதே வரிசையில், லட்சத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், நாய்களை உடன் அழைத்து வர அனுமதிக்கப்படுவதில்லை.
காக்கை போன்ற பறவைகள் இங்கு ஏராளமாக காணப்படுகின்றன, அதுவும் பிட்டி தீவில், சரணாலயமும் உள்ளது.
மேலும், கடல் பசு இந்த தீவில் காணப்படுகிறது, இது அழிந்து வரும் இனமாகவும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |