3 தலைநகரங்களை கொண்ட ஒரே இந்திய மாநிலம்.., எது தெரியுமா?
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட மாநிலம் ஒன்று உள்ளது. அதனை பற்றிய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த மாநிலம்?
எந்தவொரு அரசு வேலை தேர்வாக இருந்தாலும் பொது அறிவு மிக முக்கியமான பாடமாக இருக்கும். பொது அறிவில் நீங்கள் சிறந்தவர்களாக இருந்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
இந்தியாவில் மூன்று தலைநகரங்கள் கொண்ட மாநிலம் ஒன்று உள்ளது. அதவாது, நிர்வாக ரீதியாக 3 தலைநகரங்களைக் கொண்ட ஒரே மாநிலம் ஆந்திர பிரதேசம் ஆகும்.
ஆந்திர பிரதேசத்தின் முதல் தலைநகரம் விசாகப்பட்டினம் (Visakhapatnam) ஆகும். இங்கு தான் மாநில செயற்குழு செயல்பட்டு வருகிறது. ஆந்திர அரசின் நிர்வாக வேலைகளை இங்கு தான் மாநில அரசு செய்து வருகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது தலைநகரம் அமராவதி (Amaravati) ஆகும். இங்கு தான் ஆந்திராவின் சட்டமன்றம் உள்ளது.
மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் கூடி மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மூன்றாவது தலைநகரம் கர்னூல் (Kurnool) ஆகும். இங்கு தான் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் அமைந்திருக்கின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |