மனித முகம் கொண்ட வெள்ளை சுறா! அதிர்ஷ்டம் என வீட்டில் வைத்துக்கொண்ட மீனவர்...
இந்தோனேசியாவில் மனித உருவில் ஒரு வெள்ளை சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனித உருவில் விகாரமாக காட்சியளிக்கும் இந்த சுறாவை Abdullah Nuren (48) எனும் மீனவர் இந்தோனேசியாவின் East Nusa Tenggara மாகாணத்தில் Rote Ndao பகுதிக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் பிடித்துள்ளார்.
அவர் தற்செயலாக ஒரு பெரிய சுறாவை தனது வலையில் பிடித்துள்ளார். பின்னர் அதன் வயிற்றை கிழித்தபோது, உள்ளே மூன்று குட்டிகள் இருந்துள்ளது.
அந்த சுறா குட்டிகளில் ஒன்று மட்டும் மனிதனைப் போல தோற்றமளிக்கும் முகத்துடன் இருப்பதைக் கண்ட Nuren அதிர்ச்சியடைந்தார்.
அந்த குட்டி சுறாவுக்கு இரண்டு பெரிய வட்டமான கண்கள் இருந்துள்ளது. பார்க்க ஒரு கார்ட்டூன் பாத்திரம் போல் தோற்றமளிக்கிறது. அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் காண்பித்ததார்.
வினோதமாக காட்சியளிக்கும் அந்த சுறாவை பார்க்க அவரது வீட்டில் மக்கள்கூட்டம் குவிந்துள்ளது.
ஆக்கம் பக்கத்தினர் அதிக பணம் கொடுப்பதாக அந்த சுறாவை விலைக்கு கேட்ட போதிலும், Nuren அதை தனது வீட்டில் பத்திரமாக பதப்படுத்தி வைத்துள்ளார்.
இதன் மூலம் தனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புவதாக அவர் கூறுகிறார்.
