வீடே மணக்கும் கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி: எப்படி செய்வது?
அன்றாட செய்யும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என செய்யாமல் இந்த வித்யாசமான வெள்ளை சிக்கன் பிரியாணி செய்து பாருங்கள்.
பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும் இந்த பிரியாணியின் சுவை அனைவரையும் அடிமையாக்கி விடும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை எண்ணெய்- 150ml
- பட்டை- 2 துண்டு
- கிராம்பு- 2
- ஏலக்காய்- 2
- பிரிஞ்சி இலை- 2
- வெங்காயம்- 3
- பச்சைமிளகாய்- 9
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1½ ஸ்பூன்
- தயிர்- 150ml
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- புதினா- 1 கைப்பிடி
- சிக்கன்- ½ kg
- உப்பு- தேவையான அளவு
- பாசுமதி அரிசி- 1கப்
- தண்ணீர்- 1¼ கப்
- முந்திரி- 10
- தக்காளி- 2
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் கடலை எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.
பின் இதில் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இதில் பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் தயிர், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி பின் சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனையடுத்து இதில் கழுவி 20 நிமிடம் ஊறவைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து இதன் மேல் முந்திரி, கொத்தமல்லி மற்றும் தக்காளி சேர்க்கவும்.
இறுதியாக இதனை கிளறி மூடிபோட்டு 3 விசில் விட்டு எடுத்தால் சுவையான கொங்கு வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |