டிரம்பின் AI துறை ஆலோசகராக இருந்த இந்திய-அமெரிக்கர் ஶ்ரீராம் கிருஷ்ணன் பதவி விலகல்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகரான ஶ்ரீராம் கிருஷ்ணன் தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஶ்ரீராம் கிருஷ்ணன் பதவி விலகல்
டிரம்பின் நிர்வாகத்தில் முக்கிய செயற்கை நுண்ணறிவு(AI) கொள்கை ஆலோசகராக இருக்கும் ஶ்ரீராம் கிருஷ்ணன் இந்த மாத இறுதியில் தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஶ்ரீராம் கிருஷ்ணன் கடந்த 18 மாதங்களாக டிரம்பின் செயற்கை நுண்ணறிவு துறையின் முக்கிய முடிவுகளை, வியூகங்களை வகுத்ததில் முக்கிய பங்காற்றி வந்தார்.
தன்னுடைய பதவி விலகல் குறித்து ஶ்ரீராம் கிருஷ்ணன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
🇺🇸🚀 SOME NEWS: I'll be leaving my role at the White House at the end of this month. After a break I’ll be working on helping tackle some of the large challenges facing America on AI (more on that later).
— Sriram Krishnan (@sriramk) June 6, 2026
It is hard to express how big a privilege it has been to serve the…
அதில், சிறிது காலம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சவால்களை எதிர்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய பதவி காலத்தில், அமெரிக்க மக்களுக்கு சேவை செய்தது தன்னுடைய வாழ்நாள் பாக்கியம் என்றும், உலக அளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா முன்னணியில் இருப்பதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தொலைநோக்கு பார்வையே முக்கிய காரணம் என்றும் பாராட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |