உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் என்னென்ன தெரியுமா? ஐரோப்பிய நாடுகளில் போடப்படும் தடுப்பூசி: முழு விபரம்
உலக சுகாதார அமைப்பு எந்த கொரோனா தடுப்பூசிகளுக்கு எல்லாம் அனுமதி கொடுத்துள்ளது என்பதன் முழு பட்டியல் வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் பரவலிடம் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால், அதற்கு தடுப்பூசி தான் முழுமையான தீர்வு என்று கூறப்பட்டு வருகிறது.
உலக சுகாதார அமைப்பும் அதையே வலியுறுத்து வருகிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று,
அதில் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இது தான் என்று சில ஏமாற்று வேலைகளும் நடக்கிறது. ஆனால், உயிர் பயத்தில் இருக்கும் மக்கள் அதையும் நம்பி தடுப்பூசி என்று போட்டுக் கொள்கின்றனர்.
இருப்பினும், கொரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. அதன் விவரங்களைப் பற்றி பார்ப்போம்
pfizer & biotech Pfizer
கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Astrazeneca(covishield )
இந்த தடுப்பூசி உலக அளவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரித்தானியா, மலேசியா, தென்கொரியா, மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
johnson and johnson
இது அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது சிங்கிள் டோஸ் தடுப்பூசி என்பது நினைவுகூரத்தக்கது.
Moderna
கனாடா, டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், போர்ச்சுக்கல், தைவான் போன்ற நாடுகளில் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது.
Sinopharm
சீனா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும், இவரைத் தவிர Sputnik v, Covaxine, Sinovac போன்ற தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த, உலக சுகாதார அமைப்பின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.