புதிய தடுப்பூசிக்கு WHO அங்கீகாரம்! எந்த நாடு தயாரித்தது? வெளியான முக்கிய அறிவிப்பு
சீன நிறுவனம் தயாரித்த சினோவேக் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்துக் கொள்ள உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
உலகளவில் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 8வது கொரோனா தடுப்பூசி சினோவேக் ஆகும், மேலும் சீன தயாரிப்பு 2வது தடுப்பூசியாகும்.
கடந்த மாதம் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்ட மருந்துகளை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளிப்பது, அந்த மருத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மீதான ஒவ்வொரு நாட்டு மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு அளிக்கும் நம்பிக்கையாகும்.
மேலும், இந்த அங்கீகாரம் மூலம் சினோவேக் தடுப்பூசியை COVAX பட்டியலில் சேர்க்க முடியும். உலகளாவிய ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் உலகளாவிய திட்டமே COVAX.
இப்போது ஒவ்வொரு நாட்டு மருந்து கட்டுப்பாட்டாளர்களும், தங்கள் நாட்டில் சினோவேக் தடுப்பூசி பயன்பாட்டிற்கு தைரியமாக அனுமதி வழங்க முடியும்.
WHO-வின் சுயாதீன நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு சினோவேக் தடுப்பூசி போடலாம் என பரிந்துரைத்துள்ளது.
வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்று பரிந்துரைத்ததால் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.