பதவியில் இருக்கும்போதே தகுதி இழந்த அமைச்சர்கள் யார் யார்? ஜெயலலிதா முதல் பொன்முடி வரை
தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாகி தகுதியை இழந்த அமைச்சர்களின் எண்னிக்கை மூன்றாக உயர்ந்தது.
ஜெயலலிதா
1991 முதல் 1996 -ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு தண்டனையும்,100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ஜெயலலிதா முதலமைச்சர் பதவியையும் இழந்தார். இதன் மூலம், ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற முதல் முதல்வர் என்ற பெயர் எடுத்தார்.
டி.எம்.செல்வகணபதி
1991 முதல் 1996 -ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.செல்வகணபதி. இவர் மீது 1997 -ம் ஆண்டு சுடுகாட்டு தகன மேடை மேற்கூரை அமைக்கும் பணியில் ஊழல் செய்ததாக சி.பி.ஐ வழக்குபதிவு செய்தது.
இந்த வழக்கில் 2014 -ம் ஆண்டில் டி.எம்.செல்வகணபதி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதனால், தனது பதவியை செல்வகணபதி இழந்தார்.
இருப்பினும் அவர், 2014 -ம் ஆண்டில் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது, 2 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது.
பாலகிருஷ்ண ரெட்டி
அதிமுக ஆட்சியின் போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998 -ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
இதனால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது சிறை தண்டனைக்கு நீதிபதிகள் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
பொன்முடி
தற்போது நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் பொன்முடி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |