ரூ.15000 கோடி மதிப்புள்ள அம்பானி குடும்பத்தின் ஆண்டிலியா வீடு - கட்டியது யார் தெரியுமா?
உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீட்டை கட்டிய நிறுவனத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டிலியா வீட்டை கட்டியது யார்?
முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கின் ஒருவர் ஆவார். இவருடைய குடும்பம் இந்தியாவின் பணக்காரக் குடும்பம் மற்றும் ஆண்டிலியா என்று அழைக்கப்படும் ரூ. 15000 கோடி மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகின்றார்கள்.
இந்த வீடானது பல சிறப்பம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்பையின் மையத்தில் இந்த ஆடம்பர வீடு காணப்படுகிறது.
இது இந்தியாவின் விலையுயர்ந்த குடியிருப்பு சொத்து ஆகும். இது மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ள 27 மாடி குடியிருப்பாகும்.
4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டு உயர்தர வசதியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் பெரிய தியேட்டர், spa, நீச்சல் குளம், அதிநவீன சுகாதார மையம், swift elevators, பணி அறை, 600 பணியாளர்களுக்கான தங்குமிடம், 160 வாகனங்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர் நிற்கும் வகையில் வாகன தரிப்பிடம் என்பவை காணப்படுகின்றன.
ரிக்டர் அளவுகோலில் 8 அளவு நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிகாகோவை தளமாகக் கொண்ட கட்டிடக்கலை நிறுவனமான Perkins & Will மற்றும் சாண்டா மோனிகாவைத் தலைமையிடமாகக் கொண்ட உள்துறை வடிவமைப்பு நிறுவனமான Hirsch Bedner Associates ஆகிய இரண்டு உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த பிரமாண்டமான வீட்டை கட்டியுள்ளனர்.
வீட்டிற்கான கட்டுமான பணிகள் 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் வரை அதாவது 2010 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தாருடன் இவ்வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
ஆன்டிலியாவின் மதிப்பு
இங்கிலாந்து அரச குடும்பத்தின் வசிப்பிடமான பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு மிகவும் மதிப்புமிக்க வீடாக இது கருதப்படுகிறது.
ஆன்டிலியாவின் மதிப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.15,000 கோடியாகும்.
ஆண்டிலியாவின் சதுர அடி விலை ரூ.80,000 முதல் ரூ.85,000 வரை இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
இந்த வீட்டை பராமரிப்பதற்கு மட்டும் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.2.5 கோடி செலவாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.