"ஆங்கிலம் தெரியாதவர்கள் முட்டாள்கள் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்" ஸ்ரீதர் வேம்பு
ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் முட்டாள்களாக இருப்பார் என்ற எண்ணத்தை மக்கள் மாற்ற வேண்டுமென ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் வெறும் மொழி தான்
சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு(sridhar vembu) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் முட்டாள்கள் இல்லை என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
@twitter
“ஆங்கிலத்தை சரளமாக பேசவோ, படிக்கவோ எழுதவோ தெரியாதவர்கள் முட்டாள்கள் என்ற நிலைப்பாடு இந்தியாவில் உள்ள “elite" பிரிவு எனப்படும் மேல்தட்டு சமூகத்திடமுள்ளது. இந்த ஆங்கில மோகத்திலிருந்து விடுபடும் போது தான் நாம் முன்னேற்றத்தை காண முடியும்” என ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Elite India has the bias that people who do not speak/read/write fluent English (that would be at least 95% of our population) are stupid.
— Sridhar Vembu (@svembu) April 4, 2023
We can only make progress when we get rid of that English obsession. At Zoho, we consciously do not require English fluency for most jobs. https://t.co/fVcca464qj
மேலும் தனது சோஹோ நிறுவனத்தில் சரளமாக ஆங்கிலம் பேசுவதை வைத்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில்லை என கூறியுள்ளார்.
அசாம் முதலமைச்சர் கிண்டலுக்கு பதிலடி
அசாம் மாநில முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கிருந்த வரவேற்பாளர்கள் கருத்து பகிரப்படும் புத்தகத்தில் எழுதும் போது, ஆங்கிலம் தெரியாமல் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருந்த உரையை பார்த்து எழுதிய காணொளி இணையத்தில் வைரல் ஆனது.
@twitter
இதனால் மக்கள் அசாம் முதலமைச்சர் ஹிமண்டா பிஸ்மா சர்வாவை(Himanta Biswa Sarma) கிண்டல் செய்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்
“ நான் அசாமிலுள்ள ஆரம்ப பள்ளிக்கு சென்று ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை எழுத படிக்க கற்றுக் கொள்கிறேன். மேலும் எனக்கு ஆங்கிலம், மற்றும் ஹிந்தி தெரியாதது பற்றி எந்தவித தயக்கமும் இல்லை” என ட்விட் செய்துள்ளார்.
I went to an Assamese medium school and am trying my best to learn Hindi and English in my own humble way. I must admit that I do not know English and Hindi very well, and I have no hesitation in admitting it. https://t.co/DgeVCvqwfg
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 4, 2023
இதனை குறிப்பிட்டு கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கண்ட கருத்தை ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்துள்ளார்.