கொரோனாவுக்கு அடுத்து உலகை அச்சுறுத்தும் மார்பர்க் வைரஸ்! பாதிக்கப்பட்ட முதல் 2 பேரும் மரணம்.. எந்த நாட்டில்?
கொரோனாவுக்கு அடுத்த ஆபத்தாக மார்பர்க் என்கிற வைரஸால் கானா நாட்டில் இருவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையை World Health Organisation வெளியிட்டுள்ளது. எபோலா தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த அதே வைரசால் மார்பர்க் பரவுவதாக பிபிசியில் செய்தி வெளியாகியுள்ளது.
பாபா வாங்கா என்கிற எதிர்காலத்தைக் கணிக்கக் கூடிய பெண்மணி, 2022ஆம் ஆண்டில், மற்றொரு ஆபத்தான வைரஸ் வெளிப்படுமெனக் கணித்திருந்தது இங்கே நினைவுக்கு வருகிறது.
WHO வெளியிட்ட அறிக்கையின்படி 26 வயதான முதல் நோயாளி கடந்த மாதம் 26ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்தநாள் உயிரிழந்தார். அடுத்த நோயாளியான 51 வயதான நபர் ஜூன் 28ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் இறந்துள்ளார்.
Getty
கானாவின் தெற்கு அஷாந்தி பகுதியைச் சேர்ந்த இரு நோயாளிகளும் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்.
மார்பர்க் எளிதில் மற்றவர்களுக்குப் பரவக் கூடியது என்பதால், அந்த இருவரோடு தொடர்பிலிருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் 98 பேரை மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா தனிமைப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த போது எப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது என்றே தெரியாமல் மருத்துவர்கள் திணறினார்களோ, அதே நிலை மார்பர்க் வைரசுக்கும் இருக்கிறது.
நிறையத் தண்ணீர் குடிப்பது, மார்பர்க் வைரஸ் அறிகுறிகளுக்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வது, உயிர் பிழைக்க உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்த வைரசும் பழந்தின்னி வெளவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது. அதன் பின் மனிதர்களின் உடல் திரவங்கள் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.