உலகிலேயே அதிக தங்கம் யாரிடம் உள்ளது தெரியுமா? சுமார் 2.26 கோடி கிலோ தங்கமாம்
உலகிலேயே யாரிடம் அதிகளவில் தங்கம் இருக்கிறதோ அவர்கள் பணக்காரர்களாக அறிப்படுகிறார்கள். பழைய காலத்தில் இருந்தே தங்கமும், நிலமும் மிகப்பெரும் முதலீடாக இருகின்றது.
அந்தவகையில் இந்தியாவிலேயே அதிக தங்கம் யார் வைத்திருக்கிறார் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பொதுவாகவே அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் என இரண்டு வகை இருகின்றது. அதில் தங்கம் என்பது அசையும் சொத்தாகும். தங்கத்திற்கான மதிப்பு எப்போதும் உயர்வாக தான் இருக்கும்.
அதிக தங்கம் வைத்திருப்பது யார்?
திருமணம் போன்ற பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் இந்திய குடும்பங்களில் தங்கம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது. இது தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
பெரும்பாலும் தங்கத்தை பெண்கள் தான் அதிகமாக வைத்திருப்பார்கள். பல நூற்றாண்டுகளாக பெண்கள் தான் தங்கத்தையும் பரிசாக பெற்று வருகின்றனர்.
பல ஆய்வுகளின் அடிப்படையில், இந்திய குடும்பங்களில் மாத்திரம் சுமார் 25000 டன்கள் (சுமார் 2.26 கோடி கிலோ) தங்கம் உள்ளது.
இந்தியாவிலேயே அதிக தங்கத்தை வைத்திருப்பவர் யார் என்று கேட்டால் அதற்கான பதில் மொத்த இந்திய குடும்பமாக தான் இருக்கும்.
ஆம். உண்மை தான். ஆக்ஸ்ஃபோர்டு கோல்டு குரூப் என்ற அமைப்பின் தகவலின்படி உலகின் மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்திய குடும்பங்களில் உள்ளன.
இந்தியா என்று எடுத்தால் அது மொத்த இந்திய குடும்பத்தையும் குறிக்கிறது. இதுவே உலக அளவில் பார்த்தால், சவூதி அரேபியாவின் அரச குடும்பங்களை குறிக்கும்.
மேலும் உலக அளவில் அமெரிக்க நாட்டில்தான் மிக அதிகமான தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |