கமல் ஹாசன் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? காலையிலேயே பரபரப்பு பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
கமல் ஹாசன் கட்சி கூட்டணி?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து கட்சிகளும் அரசியல் தொடர்பான வேலைகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவர், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என தெரிவித்திருந்தார்.
அவர், காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையுடன் இணக்கமாக இருந்து வரும் நிலையில் அந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சில நாட்களாவே, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் கமல் இணைவார் என்றும், அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படும் கை சின்னத்தில் கமல் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் பரவி வந்தது.
மேலும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தொடக்க நாளான பிப்ரவரி 21 -ம் திகதி அன்று கமல் ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார்.
2 நாட்களில் நல்ல செய்தி
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "தக் லைப்' படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றேன். பின்பு, அங்கிருந்து தமிழ்நாடு திரும்பியுள்ளேன். மக்களவை தேர்தல் பணிகள் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. கூட்டணி தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |