ரூ.3400 கோடி சொத்து - இந்தியாவின் பணக்கார MLA யார் தெரியுமா?
ரூ.3400 கோடி சொத்தக்களுடன் பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ADR) என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு மற்றும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி. ரூ.3400 கோடி சொத்துக்களுடன், மஹாராஷ்ட்ரா மாநிலம், மும்பையின் காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ரூ.1,413 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
ரூ.1,700 சொத்து
இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் இண்டஸ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ நிர்மல் குமார் தாரா உள்ளார். இவர் தன்னிடம் ரூ.1,700 மட்டுமே இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் 10 பணக்கார எம்எல்ஏக்களில் 4 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் 5 வது இடத்தில் உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.757 கோடியுடன் 7 வது இடத்தில் உள்ளார்.
தமிழ்நாடு 7 வது இடம்
மாநிலத்தின் அடிப்படையில், கர்நாடகாவின் 223 எம்எல்ஏக்களும் சேர்த்து, மொத்தம் ரூ.14,179 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
இதனையடுத்து, மகாராஷ்டிராவின் 286 எம்.எல்.ஏக்கள் ரூ.12,424 கோடி சொத்துகளுடன் 2 வது இடத்திலும் ஆந்திராவின் 174 எம்.எல்.ஏக்கள் ரூ.11,323 கோடி சொத்துகளுடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
தமிழ்நாடு எம்.எல்.ஏக்கள் ரூ.2751 கோடி சொத்துகளுடன் 7 வது இடத்தில் உள்ளனர். திரிபுராவின் 60 எம்.எல்.ஏக்கள் மொத்தம் ரூ.90 கோடி சொத்துக்களுடன் கடைசி இடத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 4 எம்.எல்.ஏக்கள் 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர்.
கட்சி வாரியாக எம்.எல்.ஏ.க்கள் சொத்து
பாஜகவின் 1,653 எம்.எல்.ஏ.க்கள் மொத்தமாக, ரூ.26,670 கோடி சொத்துக்களுடன் முதலிடத்திலும், காங்கிரசின் 646 எம்.எல்.ஏ.க்கள் மொத்தமாக, ரூ.17,357 கோடி சொத்துக்களுடன் 2வது இடத்திலும்உள்ளனர்.
அடுத்ததாக 64 சுயேச்சை எம்.எல்.ஏ. க்கள் மொத்தமாக ரூ.2,388 கோடி சொத்துக்களும், தெலுங்கு தேசம் கட்சியின் 134 எம்.எல்.ஏ.க்கள் மொத்தமாக, ரூ.9,108 கோடிசொத்துக்களும் வைத்துள்ளனர்.
திமுகவின் 132 எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக, ரூ.1,675 கோடி சொத்துக்களும், அதிமுகவின் 66 எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக, ரூ.777 கோடி சொத்துக்களும் வைத்துள்ளனர்.
மாநில வாரியாக குற்ற வழக்குகள்
அதே போல் 1,861 எம்.எல்.ஏ.,க்கள் அதாவது 45 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது, குற்ற வழக்குகள் உள்ளன. இதில், ஆந்திராவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 138 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது.
பீகாரில் 158 எம்.எல்.ஏ.க்கள் மீதும், தமிழ்நாட்டில் 132 எம்.எல்.ஏ.க்கள் மீதும், மகாராஷ்டிராவில் 127, எம்.எல்.ஏ.க்கள் மீதும் கேரளாவில் 9 எம்.எல்.ஏ.க்கள் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
கட்சி வாரியாக குற்ற வழக்குகள்
பாஜகவின் 1,653 எம்.எல்.ஏ.,க்களில், 39 சதவீதம் பேர், அதாவது 638 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் 646 எம்.எல்.ஏ.க்களில், 52 சதவீதம் பேர் அதாவது 339 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியின்134 எம்.எல்.ஏ.க்களில், 115 பேர் மீதும், ஆம் ஆத்மி கட்சியின் 123 எம்.எல்.ஏ.க்களில், 69 பேர் மீதும், திமுகவின்132 எம்.எல்.ஏ.க்களில், 98 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |