எலான் மஸ்க்கின் மனைவி இந்திய வம்சாவளி பெண் - யார் இந்த ஷிவோன் ஜிலிஸ்?
தன்னுடைய மனைவி இந்திய வம்சாவளி என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், நியூரோலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

சமீபத்தில், Zerotha நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் உடன் பாட் காஸ்ட் ஒன்றில் எலான் மஸ்க் உரையாடியுள்ளார்.

இதில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட அவர் தனது மனைவி ஒரு இந்திய வம்சாவளி என தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய எலான் மஸ்க், "எனது துணைவி ஷிவோன் சிலிஸ்(Shivon Zilis) இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

ஷிவோன் சிலிஸ் குழந்தையாக இருந்தபோது தத்தெடுக்கப்பட்டு கனடாவில் வளர்ந்தவர். அவரின் தந்தை இந்தியாவில் இருந்து பல்கலைகழகத்தில் பயில வந்த மாணவர். எனக்கு சரியான விவரங்கள் தெரியவில்லை அனால் அவர் தத்தெடுக்கப்பட்டு கனடாவில் வளர்ந்தவர்.
மேலும், எங்களது மகன்களில் ஒருவருக்கு, இந்திய வம்சாவளி அமெரிக்கரான நோபல் விருது வென்ற சந்திரசேகரர் நினைவாக சேகர் என பெயர் வைத்தோம்" என தெரிவித்துள்ளார்.

ஷிவோன் சிலிஸ்
1986 ஆம் ஆண்டு ஒன்ராறியோவின் மார்க்காமில் பிறந்தார் ஷிவோன் ஜிலிஸ்.

யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஐஸ் ஹாக்கி மற்றும் தடகளத்தில் ஆர்வம் காட்டியுள்ளார்.
அதன் பின்னர் IBM நிறுவனத்தில் நிதி தொழில்நுட்பம் மற்றும் இயந்திர கற்றலில் பணியாற்றியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட 30 துணிகர முதலீட்டாளர்களின் பட்டியலில் ஜிலிஸ் இடம் பிடித்தார்.
2017 முதல் 2019 வரை டெஸ்லாவின் ஆட்டோபைலட் திட்டத்தில் பணியாற்றியுள்ளார்.

2017 ஆம் ஆண்டில், மஸ்க்கின் மூளை சிப் நிறுவனமான நியூராலிங்கின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார், அங்கு அவர் தற்போது செயல்பாடுகள் மற்றும் சிறப்பு திட்டங்களின் இயக்குநராக பணியாற்றுகிறார்.
இந்த தம்பதிக்கு ஒரு இரட்டையர் உட்பட மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |