ரூ. 20,000 கோடி சொத்து.., உலகிலேயே பணக்கார இசைக்கலைஞர் யார் தெரியுமா?
ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகரான Jay-Z உலக அளவில் பணக்கார இசைக்கலைஞர் ஆவர்.
இவரது சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் 2.5 பில்லியன் என கூறப்படுகிறது. அதாவது 20,000 கோடி சொத்து மதிப்பு.
25 கிராமிய விருதுகளை வென்ற Jay-Z, தொடக்கத்தில் சி.டிகளை விற்று வந்தார். இதற்கு பின் படிப்படியாக முன்னேறினார்.
1990களில் பிரதான இசை நிறுவனம் இவரது ஆல்பத்தை புறக்கணித்தது.
இதன் பின் 1995ல் தனது நண்பர்களுடன் இணைந்து புதிய இசை நிறுவனத்தை தொடங்கினார்.
1996ல் இவரது முதல் ஆல்பம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
1999ஆம் ஆண்டில் ஃபேஷன் துறைக்குள் அடியெடுத்து வைத்தவர் பிராண்டட் துணிகளுக்கான நிறுவனத்தை தொடங்கினார்.
இசையை கடந்து தொழில்துறையில் கோலோச்சி வரும் இவர் இரண்டு தளங்களிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலமே அவரது சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி என்ற அளவில் உயர்ந்துள்ளது.
இவரது வருவாயில் 3 சதவீதம் மட்டுமே இசைத் துறையிலிருந்து வருகிறது, மீதமுள்ள 97 சதவீதம் அவரது வணிகத்திலிருந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |