கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு! கவலை தெரிவித்த உலக சுகாதார அமைப்பு
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரி கவலை தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாக உலகம் முழுவதும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் உலகம் முழுவகும் 20 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொற்றிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்சினைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. நீண்ட நாள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றிலிருந்து மீண்ட பிறகு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதனால் அவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.