பிரித்தானியா.. இந்தியா மாறுபாட்டை இனி இப்படி தான் அழைக்க வேண்டும் ! புதிய பெயர் சூட்டியது WHO
பிரித்தானியா, இந்தியா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடுகளுக்கு கிரேக்க எழுத்துகளை பெயர்களாக வைத்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
புதிததாக கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடுகளுக்கு அந்தந்த நாட்டின் பெயர்களை வைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை வைத்துள்ளது.
அதன் படி, பிரித்தானியாவில் செப்டம்பர் 2020-ல் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாட்டிற்கு ஆல்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2020 மே மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாட்டுக்கு பீட்டா, 2020 நவம்பர் மாதம் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு காமா, 2020 அக்டோபர் மாதம் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு டெல்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2020 மே மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான், 2020 ஏப்ரல் பிரேசிலில் கண்டறியப்பட்டதற்கு ஸீட்டா, 2020 டிசம்பவர் பல நாடுகளில் கண்டறியப்பட்ட மாறுபாட்டிற்கு ஈட்டா, 2021 ஜனவரி பிலிப்பைன்ஸில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு தீட்டா, 2020 நவம்பர் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதற்கு கோட்டா மற்றும் 2020 அக்டோபர் மாதம் இந்தயாவில் கண்டறியப்பட்ட மாறுபாட்டிற்கு கப்பா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உருமாறும் கொரோனாவை கண்டுபிடிக்கும் நாட்டின் பெயரை சூட்ட எதிர்ப்பு எழுந்தால் உலக சுகாதார அமைப்பு இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பெயர்கள் விவாதங்களை எளிதாக்குவதோடு, பெயர்களில் இருந்த சில களங்கங்களை அகற்ற உதவும் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா வேன் கெர்கோவ் கூறுகையில், முக்கியமான அறிவியல் தகவல்களை தாங்கி நிற்கும் அறிவியல் பெயர்கள் ஆராய்ச்சிகளின் தொடர்ந்து பயன்படுத்தப்படும், புதிய பெயர்கள் தற்போது இருக்கும் அறிவியல் பெயர்களை மாற்றாது என தெரிவித்தார்.