இன்னும் முடியல! Omicron வைரஸ் குறித்து உலக நாடுகளை எச்சரித்த WHO
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து உலக நாடுகளுக்கு சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் பரவத் தொடங்கிய கொரோன தொற்று பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. கொரோனாவை தொடர்ந்து டெல்டா, Omicron போன்ற பல வகை வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் புதிதாக உருமாறிய கொரோனா வகைகளும் உலகை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கோவிட் கட்டுப்பாடுகளை மெதுவாக எளிதாக்குமாறு உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் சமீபத்தில் நடந்த வீடியோ கான்பிரன்ஸில் கூறியதாவது, Omicron மாறுபாட்டில் பல நாடுகள் இன்னும் உச்சத்தை அடையவில்லை என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பல நாடுகளில் குறைந்த அளவிலே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் சூழலில் எல்லா கட்டுப்பாடுகளையும் ஒரே நேரத்தில் தளர்த்துவது சரியானது அல்ல. ஏனெனில் இந்த வைரஸ் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று தெரிவித்தார்.
அரசியல் அழுத்தம் காரணமாக சில நாடுகள் கோவிட் கட்டுப்பாடுகளை முன்கூட்டியே தளர்த்துகின்றன. இது தேவையற்ற கொரோனா பரவல் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுக்கும்.
ஒவ்வொரு நாடும் ஒரே சூழ்நிலையில் இல்லை. பல நாடுகளுக்கு இது ஒரு மாறுதல் கட்டம் என்று நான் நினைக்கிறேன். எனவே படிப்படியாக தளர்வுகளை அறிவிப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.