பிரித்தானியாவில் 6 முட்டைகள் விலை 800 ரூபாய்... ஏனிந்த விலை உயர்வு?
பிரித்தானியாவில் 2022இல் ஆறு முட்டைகள் விலை ஒரு பவுண்டு. இன்று, அதே ஆறு முட்டைகள் விலை 1.80 பவுண்டுகள்.
இதையே ரூபாயில் கூறினால், முட்டை விலை உயர்வு வியப்பை ஏற்படுத்தும். ஆம், 2022இல் ஆறு முட்டைகள் விலை இலங்கை மதிப்பில் 448.62 ரூபாய். இன்று, ஆறு முட்டைகள் விலை 807.52 ரூபாய்.
எதனால் இந்த விலை உயர்வு?
பொதுவாகவே. எங்காவது போர் வந்தால் கூட, அது சம்பந்தமே இல்லாத நாடுகள் மீது கூட பாதிப்பை ஏற்படுத்தும் என நமது தளத்தில் நாம் அடிக்கடி எழுதுவதுண்டு.

அதாவது, எங்கோ இருக்கும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ஆப்பிரிக்க நாடுகள் கோதுமை கிடைக்காமல் அவதியுள்ளன.
விடயம் என்னவென்றால், கோதுமை கிடைக்காமல் அவதியுற்றது ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல, கோதுமை பிரச்சினை பிரித்தானியாவையும் பாதித்துள்ளது என்பது, இந்த முட்டை விலை உயர்வு குறித்த செய்தி மூலம் இப்போது தெளிவாகியுள்ளது.
ஆம், உலக சந்தையில் 10 சதவிகித கோதுமை உக்ரைனிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த 10 சதவிகிதம் 20 சதவிகிதம் என்பது எவ்வளவு பெரிய விடயம் என்பது, 20 சதவிகித எண்ணெய் போக்குவரத்துக்குக் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகம் அனுபவித்துவரும் பிரச்சினைகள் மூலம் இன்று அனைவருக்கும் தெரியவந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரித்தானியாவில் கோழிகளுக்கு உணவாக வழங்கப்படும் கோதுமையின் ஒரு பகுதியும் உக்ரைனிலிருந்துதான் வருகிறது எனலாம்.
ஆக, உக்ரைன் ரஷ்யப் போர் கோதுமை விலையை உயர்த்த, மத்திய கிழக்குப் போரால் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், கோழிகளை வளர்க்கும் அறைகளை சூடாக்கும் எரிவாயு விலை அதிகரிக்க, முட்டை போக்குவரத்துக்கான வாகனங்களுக்கான எரிபொருள் விலையும் சேர்ந்துகொள்ள, மொத்தத்தில் மக்கள் அன்றாடம் உண்ணும் அத்தியாவசிய உணவான முட்டை விலை உயர்ந்துவிட்டது.
முட்டை மட்டுமல்ல, பால், பாண் ஆகிய அத்தியாவசிய உணவுகளின் விலை மீதும் இதே போர்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆக, அன்று ஒரு பவுண்டுக்கு ஆறு முட்டை வாங்கினோம், ஒன்று கிட்டத்தட்ட விலை இரண்டு மடங்காகிவிட்டதே என்னும் ரீதியில் பிரித்தானிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |