விமானங்களில் ஏன் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்கிறார்கள்? காரணம் தெரியுமா
விமானங்களில் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விமானத்தில் வெள்ளை நிற பெயிண்ட்
உலகளவில் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
விமானங்களில் வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதால், எண்ணெய் கசிவு, விரிசல் உள்ளிட்ட பிரச்சனை இருந்தால் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
பொதுவாக, வெள்ளை நிறங்கள் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால், விமானங்களில் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதுவே, முக்கிய காரணம் ஆகும்.
ஏனென்றால், விமானங்களில் வேறு நிறத்தில் பெயின்ட அடித்தால் சூரிய ஒளியை அதிகம் உறிஞ்சி சூட்டை கிளப்பி விடும்.
அதாவது, வெள்ளை நிறமானது வெப்பத்தை குறைப்பது மட்டுமல்லாமல் சூரிய கதிர்வீச்சுகளால் சேதாரம் உண்டாகும் வாய்ப்புகளையும் குறைத்துவிடும்.
மற்றொரு காரணம் என்னவென்றால், வெள்ளை நிறத்தை தவிர வேறு நிறங்களை விமானங்களில் பயன்படுத்தினால் அதன் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதாவது, பெயிண்ட் காரணமாக ஒரு விமானத்தின் எடையானது 273 முதல் 544 கிலோகிராம் வரை அதிகரிக்கிறது. இந்த தகவலை உலகப்புகழ் பெற்ற போயிங் நிறுவனத்தினுடைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விமானத்தின் எடை அதிகரித்தால் அதிக எரிபொருள் தேவை ஏற்படும் நிலை உண்டாகும். 544 கிலோ என்பது 8 பயணிகளுக்கு சமமானது. இந்த பிரச்சனையை ஓரளவிற்கு சமாளிப்பதற்காகவே வெள்ளை நிறத்தை பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் சொந்தமாக விமானம் வைத்திருந்தாலும் வேறு வண்ணங்களை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், அதனை நீங்கள் விற்க முடிவு செய்தால் கடினமாக மாறும்.
பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெள்ளை நிறத்தையே தேர்வு செய்கின்றன. விமானங்களை பராமரிக்கும் செலவு மிகவும் அதிகம்.
ஒரு நிறுவனம், உங்களிடம் இருந்து விமானத்தை வாங்கினால் அதற்கு மீண்டும் வெள்ளை நிறத்தை பெயிண்ட் செய்ய வேண்டும். இதற்கு ஏற்படும் செலவை கருத்தில் கொண்டு அதனை வாங்காமல் தவிர்த்து விடுவதற்கு வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |