வீட்டு வாசலில் குப்பையை கொட்டும் அதிகாரிகள்: ஏன் தெரியுமா?
பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க பெங்களூரு சுகாதார அதிகாரிகள் புதிய பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவில் அதிரடி குப்பை கழிவு நடவடிக்கை
பெங்களூருவில் பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தடுக்கும் புதிய முயற்சியாக பெங்களூரு பெருநகர் ஆணையம் மற்றும் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை லிமிடெட் அமைப்பு இணைந்து புதிய சர்ச்சைக்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதாவது பொது இடங்களில் விதிமுறைகளை மீறி குப்பை கொட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர்களின் வீடுகளுக்கு முன்பு அவரவர் வீசிய குப்பையை திருப்பி கொட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை அவசியமானது என்றும், இதுவரை 190 குடியிருப்புகளுக்கு முன்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தியும் அவை தோல்வியடைந்த பிறகே, இந்த சர்ச்சைக்குரிய விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கி இருப்பதாகவும், இது பலனளிக்க தொடங்கி இருப்பதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து நகரில் குப்பை கொட்டப்படுவது தொடர்பான கருப்புப் புள்ளிகள் 869 இருந்து 150 ஆக குறைந்து இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.2000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் சிலர் வலுவான ஆதரவு தெரிவித்து வரும் அதே நேரத்தில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |