காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் ஏன்? வியக்க வைக்கும் அமைச்சரின் பதில்
இந்திய மாநிலம், கேரளாவில் அண்மையில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புது விளக்கம் அளித்துள்ளார்.
வந்தே பாரத் ரயில்
கடந்த 2018 -ம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு, தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயிலானது நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்து வந்த நிலையில், அதனை சோதனை முறையில் மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது, ரயிலின் நிறமானது காவி நிறத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சரின் விளக்கம்
இதனால், வந்தே பாரத் ரயிலின் நிற மாற்றம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு, மூவர்ண கொடியில் உள்ள ஆரஞ்சு நிறத்தால் ஈர்க்கப்பட்டு, ரயிலின் நிறம் மாற்றம் செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.
அதே போல சமீபத்தில், கேரளாவில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவையிலும் நிறம் மாற்றப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ஆரஞ்சு நிறம் கண்களுக்கு நன்றாக தெரியும் என்பதாலேயே, வந்தே பாரத் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவில் உள்ள ரயிலின் நிறங்களும் இந்த நிறத்தில் தான் இருக்கின்றன" என்று புது விளக்கம் அளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |