ஆடம்பர ரகசிய பதுங்குகுழிகளை உருவாக்கும் மார்க், சாம் ஆல்ட்மன் போன்ற பில்லியனர்கள் - என்ன காரணம்?
நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் அல்லது அணு ஆயுத போர்கள் ஆகியவற்றில் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
ஆனால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், Open AI CEO சாம் அல்ட்மன், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற பில்லியனர்கள், அது போன்ற எதிர்கால பேரழிவுகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தயாராகி வருகின்றனர்.
மார்க் ஜுக்கர்பெர்க்
மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், 300 மில்லியன் டொலர் செலவில் பதுங்கு மாளிகையை கட்டி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோ பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் அவர் 110 மில்லியன் டொலர் செலவில் 11 வீடுகளை வாங்கியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இதில், 4 வீடுகளை இடித்து பெரிய நிலத்தடி மாளிகைகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தோட்டங்கள், விருந்தினர் மாளிகைகள், நீச்சல் குளங்கள், ஆகிய ஆடம்பர வசதிகள் இடம்பெற்றுள்ளது.
மேலும், ஹவாய்ன் தீவில், 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அவர் நிலம் வாங்கியுள்ளார். இங்கு 2 பெரிய ஆடம்பர மாளிகைகளை கட்டி வருகிறார். இதிலும், நிலத்தடி பதுங்குகுழியும் உள்ளதாக கூறப்படுகிறது.
சாம் ஆல்ட்மேன்
இதே போல், Open AI CEO சாம் ஆல்ட்மேனும் பாதுகாப்பான் நிலத்தடி தலைமையகத்தை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளிப்படையாகவே பேசியுள்ளார். ஆனால் அதை அவர் பதுங்கு குழி என கூறவில்லை.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் போர்களை சுட்டிக்காட்டி, இன்னொன்று கட்டலாம் என தெரிவித்தார்.
இதே போல், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்சும் ரகசிய ஆடம்பர மாளிகை ஒன்றை கட்டியுள்ளார்.
எலான் மஸ்க்கின் திட்டம்
உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், டெக்ஸாஸின் ஆஸ்டினுக்கு வெளியே 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 356 மில்லியன் டொலருக்கு பெரிய எஸ்டேட் ஒன்றை கட்டியுள்ளார்.
அங்கே அவரது 12 குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் 3 தாய்கள் வசித்து வருகிறார்கள்.
மற்றவர்கள் போல் எலான் மஸ்க் நிலத்தடி பங்குகுழிகள் குறித்து சிந்திப்பதற்கு மாற்றாக, அழிவு ஏற்படும் சூழலில் தனது குடும்பத்தை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பல்லியனர்களின் பதுங்குகுழிகள் சூரிய சக்தியால் இயக்கப்படுகின்றன. அதிநவீன காற்று மற்றும் நீர் வடிகட்டுதல் அமைப்பை கொண்டுள்ளது. இதில் பலரும், மண் இல்லாமல், காய்கறிகள் மற்றும் தானியங்களை வளர்க்கக்கூடிய ஹைட்ரோபோனிக் பண்ணைகளை கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |