வாரத்திற்கு 190 மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை - பின்னணி என்ன?
வாரத்திற்கு 190 மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை பிரேசில் தொடங்கியுள்ளது.
கொசு உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கிய பிரேசில்
பொதுவாக கொசுக்கள் நோயை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக கருதி, அனைத்து நாடுகளின் கொசுக்களை கட்டுப்படுத்தும் செயலில் இறங்கும்.

ஆனால், நாடு ஒன்று வாரத்திற்கு 190 மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை திறந்துள்ளது.

பிரேசிலின் சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள காம்பினாஸ் என்ற நகரத்தில், 1300 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
உலக கொசு திட்டத்தின் (WMP) கீழ் இயங்கும் இந்த தொழிற்சாலையில், ஒவ்வொரு வாரமும் 190 மில்லியன் ஏடிஸ் எகிப்தி கொசுக்களை உற்பத்தி செய்ய முடியும்.
2024 ஆம் ஆண்டு பிரேசில் கடுமையான டெங்கு பரவலை எதிர்கொண்டது. உலகில் பதிவான 80% டெங்கு தொற்று பிரேசில் பதிவானதாகும்.
பின்னணி என்ன?
இதனை எதிர்த்து போராட திட்டமிட்ட பிரேசில், கொசுக்களை முற்றிலும் அழிப்பதற்கு பதிலாக அதன் உயிரியலை மாற்ற திட்டமிட்டது.
இதற்காக வோல்பாச்சியா என்ற முறையை கையில் எடுத்துள்ளனர். இந்த தொழிற்சாலையில் வளர்க்கப்படும் கொசுக்கள் வோல்பாச்சியா என்ற பாக்டீரியாவுடன் உருவாக்கப்படுகிறது.

இதனால் கொசுக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த பாக்டீரியா, கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் உருவாகுவதை தடுக்கும்.
இந்த வோல்பாச்சியா கொசு மனிதர்களை கடிக்கும் போது, அவற்றால் டெங்குவை மனிதர்களுக்கு பரப்ப முடியாது.
இந்த கொசுக்களை திறந்த வெளியில் பரவிவிடும் போது, அது இயற்கையான மற்ற கொசுக்களுடன் இணைந்து, வோல்பாச்சியா பாக்டீரியாவை அடுத்த சந்ததிக்கு கடத்துகிறது.
இதன் மூலம், டெங்குவை பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை நாளடைவில் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே இந்தோனேசியா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் வோல்பாச்சியா முறை வெற்றிகரமாக செயல்பட்டு, 70% டெங்கு நோயாளிகளை குறைக்க உதவியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |