என் படங்களில் ஏன் சாதி பெயர் வருகிறது? இத்தனை நாட்கள் கழித்து கமல் ஹாசன் விளக்கம்
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதாரத்து கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கமல் பிரச்சாரம்
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதாரத்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "மக்களுடன் கலக்காத அரசாக மத்தியில் இருக்கும் பாஜக அரசு உள்ளது. அனைத்து சித்தாந்தங்களும் மக்களுக்காக தான். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று வெளி நாட்டு அறிஞர்கள் கவலை படுகிறார்கள். நாங்கள் வீரர்கள், அதனால் களம் கண்டுள்ளோம்.
நாங்கள் இந்த தேர்தலில் தியாகம் செய்யாமல் வியூகம் செய்துள்ளோம். தன் வாழ்வை சமூகத்துக்கு கொடுத்து, குரலற்றவர்களின் குரலாக, பெருஞ்சிறுத்தையாக திருமாவளவன் இருக்கிறார்.
நான் அரசியலில் வருவதற்கு முன்பு சாதியம் என் எதிரி என்று கண்டுபிடித்தேன். ஆனால், என் படங்களில் சாதி பெயர் ஏன் வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம். குடியைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால், குடிகாரனைத்தான் மையப்படுத்தி தான் எடுக்க வேண்டும். அதை போல தான் படங்களின் பெயர்களும் வைக்கப்படுகின்றன.
எத்தனை பேர் அடிமையாக உள்ளனர் என்பதை கண்டுபிடிக்கவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கேட்கிறோம். ஆங்கிலேயர்கள் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு சனாதனவாதிகள் பதற்றம் அடைந்தார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. சமூக நீதிக்கு எதிராக பாஜக அரசு உள்ளது. அதனால், பானை சின்னத்தில் வாக்களித்து திருமாவளவனை வெற்றி பெற செய்யுங்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |