நீதா அம்பானி ஏன் பச்சை ரத்தினத்தை அடிக்கடி அணிகிறார்? பின்னணியில் இருக்கும் காரணம்
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பச்சை ரத்தினத்தை அணியும் காரணத்தை பற்றி பார்க்கலாம்.
என்ன காரணம்?
முகேஷ் அம்பானியின் மனைவியும், தொழிலதிபருமான நீதா அம்பானி தனது நகைகள் மற்றும் ஃபேஷனுக்காக பிரபலமானவர். அவர் தன்னை அழகாகவும் நேர்த்தியாகவும் கொண்டு செல்வதற்கு தனக்கென தனி சிறப்பை வைத்துள்ளார்.
அவருக்கு மிகவும் பிடித்தது மரகத ரத்தினம் என்று கூறப்படுகிறது. ஆனால் பளபளப்பு மற்றும் அழகை விட ரத்தினத்தில் அதிகமாக இருக்கிறது.
இந்தியில் பச்சை ரத்தினத்தை, 'பன்னா' என்று அழைப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் பச்சை ரத்தினம் மங்களகரமானது மற்றும் அதை அணிபவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், செழிப்பைக் கொடுக்கிறது.
மேலும் இதனை அணிந்தால் எதிர்மறையை அகற்றி, வாழ்க்கையில் நேர்மறையை வளர்ப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், அவை செல்வம் மற்றும் செழிப்புக்கான அடையாளமாகவும் இருக்கின்றன.
அதேபோல, கண் தொடர்பான நோய்கள் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே, இதை அணிவது செழிப்பை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது.
எனவே, நீதா அம்பானி பச்சை ரத்தினத்தை அணிந்திருப்பது அவரது தோற்றத்தை மட்டுமல்ல, செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் சேர்க்கிறது என்று பலர் கருதுகின்றனர்.
இந்த நேர்மறை ரத்தினத்தை அடிக்கடி அணிவதன் மூலம் அவர் பெற்ற ஆரோக்கியம் மற்றும் செல்வச் சாதனைகளுக்கு முக்கியத்துவமா இருப்பதாக கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |