நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றினால் அணைவது ஏன்? பின்னால் இருக்கும் அறிவியல் காரணம்
தண்ணீரை நெருப்பின் மீது ஊற்றும்போது அது அணைவதற்கான அறிவியல் காரணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
மனித குலத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெருப்பு ஆகும். இது நமது வாழ்க்கையில் பல இடங்களில் அத்தியாவசியமாக உள்ளது.
நமது வீட்டின் சமையல் முதல் தொழிற்சாலைகள் வரை நெருப்பு முக்கிய அங்கமாக இருக்கிறது. ஆனால், இந்த நெருப்பு கட்டுக்கடங்காமல் பரவினால் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நெருப்பு ஒரு வேதியியல் வினை ஆகும். இதில் இருந்து வெப்பம் மற்றும் ஒளி வெளியிடப்படுகிறது. இது எரிபொருள் (Fuel), ஆக்சிஜன் (Oxygen) மற்றும் வெப்பம் (Heat) ஆகிய மூன்று மூலக்கூறுகளை கொண்டுள்ளது.
இந்த மூன்றும் ஒன்றிணைந்தால் மட்டுமே நெருப்பு உருவாகும். இதனை "நெருப்பு முக்கோணம்" என்றும் அழைப்பார்கள்.
இதில் எரிபொருள் என்பது மரம், காகிதம் ஆகிய எரியக்கூடிய பொருள் ஆகும். ஆக்சிஜன் என்பது எரிதலுக்குத் தேவையான வாயு. வெப்பம் என்பது எரியக்கூடிய ஆற்றல் ஆகும்.
1. தண்ணீரில் அதிக வெப்பத்தை உறிஞ்சும் திறன் இருப்பதால் நெருப்பின் மீது அதனை ஊற்றும்போது அணைகிறது.
அதாவது, நெருப்பின் வெப்பத்தை உறிஞ்சி, எரிபொருளின் வெப்பநிலையை எரியும் நிலைக்குக் கீழே குறைக்கிறது. இதனால் நெருப்பு அணைகிறது.

1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு?
2. நெருப்பில் ஊற்றப்படும் தண்ணீரானது ஆவியாகும் போது நீராவியாக மாறுகிறது. இது எரியும் பொருளைச் சுற்றி சூழ்வதால் எரியும் பொருளுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இந்த காரணத்தில் நெருப்பு அணைகிறது.
எப்போது தண்ணீர் ஊற்றக்கூடாது?
1. எண்ணெயில் பற்றிய நெருப்பின் மீது தண்ணீரை ஊற்ற கூடாது. ஏனென்றால் எண்ணெய்யின் மீது தண்ணீர் மிதந்து எரியும். இது நெருப்பை மேலும் பரவ செய்யும்.
2. மின்சாரக் கருவிகளில் பற்றிய நெருப்பின் மீது தண்ணீரை ஊற்ற கூடாது. அவ்வாறு தண்ணீரை ஊற்றினால் மின்சாரத்தைக் கடத்தி ஆபத்தை விளைவிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |