டாஸ்மாக்கில் மது விற்பனை ஏன் குறைந்து விட்டது? தமிழகத்தில் பெண் அதிகாரி கேள்வி
தமிழகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மது விற்பனை சரிந்துள்ளதற்கு காரணம் என்ன என்று பெண் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மது விற்பனை ஏன் குறைவு?
தமிழக மாவட்டமான சேலத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா பங்கேற்றார்.
அவர், அப்போது பேசுகையில் டாஸ்மாக் கடைகளில் 20 சதவீதம் மது விற்பனை சரிந்துள்ளதற்கு காரணம் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, மது விற்பனை ஏன் குறைகிறது என்பதற்கான காரணத்தை கடை மேற்பார்வையாளர்கள் விவரித்தனர்.
பின்னர், கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்றும், தெரிந்தும் தெரியாமலும் இருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரி நர்மதா கூறினார்.
அதேபோல, தற்போதைய சூழ்நிலையின் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பல்க் சேல்ஸ் வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், டாஸ்மாக் கடைகளை திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் குறித்து கடை மேற்பார்வையாளர்களிடம் அதிகாரி விசாரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |