சமந்தா மிகவும் நல்ல பெண்! ஆனாலும் பிரிந்தது ஏன்? நாகசைதன்யா உருக்கம்
சமூக ஊடகங்களில் வெளியான வதந்திகளால் தான் எங்களிடையே பிரிவு ஏற்பட்டது என்று நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், திரைப்பட நடிகருமான நாக சைதன்யா உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.
சமந்தா-நாகசைதன்யா பிரிவு
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான சமந்தாவும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தனர். இருவருக்கும் கிட்டத்தட்ட திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் மேல் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி இருவரும் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் முழுமனதுடன் பிரிவதாக அறிவித்தனர்.
Naga Chaitanya and Samantha Akkineni (Instagram)
இருவருக்கும் இடையிலான பிரிவு தொடர்பான ஊகங்கள் பல்வேறு விதமாக இணையத்தில் உலா வந்தாலும், இருவரும் அதன் மேல் கவனம் செலுத்தாமல், எந்த விரிவாக்கமும் செய்யாமல் அமைதி காத்தனர்.
நடிகர் நாகசைதன்யா விளக்கம்
இந்நிலையில் நடிகை சமந்தாவுடனான திருமண வாழ்க்கை குறித்து நடிகர் நாகசைதன்யா உருக்கமான விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
— chaitanya akkineni (@chay_akkineni) October 2, 2021
அதில், சமந்தா மிகவும் நல்ல பெண், நான் அவருடன் வாழ்ந்த நாட்களை மிகவும் மதிக்கிறேன், சமூக ஊடகங்களில் வெளிவந்த சில வதந்திகளால் தான் முதலில் எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை உண்டானது.
அதை நான் முதலில் கண்டு கொள்ளவில்லை ஆனால் அதன்பின் சூழ்நிலை மாறிவிட்டது, எங்களிடையே பிரச்சனை மெல்ல மெல்ல பெரிதாகி இறுதியில் இருவரும் பிரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது என்று நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், திரைப்பட நடிகருமான நாக சைதன்யா உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.