இங்கிலாந்து டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் சிவப்பு நிற தொப்பு அணிந்து விளையாடியது ஏன் தெரியுமா? நெகிழ்ச்சி தகவல்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரு அணி வீரர்களும் சிவப்பு நிற தொப்பு அணிந்து விளையாடுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களும், அதன் பின் ஆடி வரும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சிவப்பு நிற தொப்பி அணிந்து விளையாடி வருகின்றனர். ஏனெனில் முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன, ஆன்ட்ரூ ஸ்டிராசின் மனைவி ரூத் ஸ்டிராஸ் கடந்த 2018-ஆம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்தார்.
அவரது நினைவாக, பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கிட, நுரையீரல் புற்றுநோய் ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, ரூத் ஸ்டிராஸ் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆன்ட்ரூ ஸ்டிராஸ் நிறுவினார்.
Today is a special day as @homeofcricket turns #RedforRuth in support of the @RuthStraussFdn and its incredible work in supporting grieving families ❤️
— England Cricket (@englandcricket) August 13, 2021
Please, if you can, donate and lend your support ➡️ https://t.co/sdW5RbaZTo#ENGvIND ? pic.twitter.com/ZwmPGGOucD
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இரண்டாம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன், இந்தியா–இங்கிலாந்து வீரர்கள் சிவப்பு நிற தொப்பி அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.