வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை - மூன்று முக்கிய காரணங்கள்
தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 3,000 டொலர் மதிப்பை தாண்டியுள்ளது.
இந்த உயர்விற்கான மூன்று முக்கிய காரணங்களை Bloomberg வெளியிட்டுள்ளது.
1. மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை குவிப்பது
2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ததிலிருந்து, பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை குவிக்க தொடங்கின.
அமெரிக்க டொலரின் மீது நம்பகத்தன்மை குறைவதைத் தடுக்கவும் தங்கள் நாணய ஆதாரங்களை பாதுகாக்கவும் சீனா, இந்தியா, போலந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கியுள்ளன.
2. பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம்
உலகளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் அதிகரிப்பு, வளர்ச்சிப் பாதை தளர்வதில் உள்ள அபாயம், முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளை தேர்வு செய்ய தூண்டியுள்ளது.
3. அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வர்த்தக கொள்கைகள் உலகளவில் வர்த்தக மோதல்களை அதிகரிக்க, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பாகப் பார்க்கத் தூண்டியுள்ளது.
இதன் காரணமாக நியூயார்க் COMEX சந்தைக்கு 23 மில்லியன் அவுன்ஸ் தங்கம் வந்துள்ளது.
தங்கத்தின் விலை $3,500 வரை செல்லும் என முன்னணி நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்தால், தங்கத்தின் விலை உயர்வுகள் தொடரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |