45 வயதிற்குப் பிறகு உடல் எடையை குறைப்பது ஏன் கடினம்?
சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் சுலபமாக இருக்கும். அதே சமயம், சிலருக்கு உடல் எடையை குறைப்பது பெரிய சவாலாக இருக்கும்.
பலவீனமான வளர்சிதை மாற்றத்தால் இது பெரும்பாலும் நிகழ்கிறது. எளிதில் எடை குறையாமல் இருப்பதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன.
வாழ்க்கை முறை, மன அழுத்தம், உணவுப் பழக்கம் மற்றும் தூக்கம் போன்றவையும் இதில் அடங்கும்.
குறிப்பாக, பெண்களின் எடை இழப்பு மற்றும் அதிகரிப்பு பெரும்பாலும் ஹார்மோன்களைப் பொறுத்தது.
வயதின் வெவ்வேறு நிலைகளில், பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது பெண்களின் எடை, மனநிலை, கருவுறுதல் மற்றும் பல விடயங்களில் பங்குக் கொள்கிறது.
40-45 வயதைத் தாண்டிய பிறகு, பெண்களுக்கு உடல் எடையைக் குறைப்பது பெரும்பாலும் கடினமாகிவிடும். இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
உடல் எடை குறைப்பது ஏன் கடினம்?
பெண்களுக்கு 45 வயதுக்கு பிறகு உடல் எடையை குறைப்பது கடினம். இந்த நேரத்தில் வளர்சிதை மாற்றமும் குறைகிறது. இதன் காரணமாக எடையை குறைப்பது கடினமாக இருக்கிறது.
இந்த வயதிற்குப் பிறகு, பெண்களின் உடலில் கார்டிசோல் அதாவது மன அழுத்த ஹார்மோனின் அளவு மாறுகிறது. அதே நேரத்தில் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் உடலின் திறனும் பாதிக்கப்படுகிறது.
வயதாகும்போது, கார்டிசோலின் அளவு அதிகரிப்பது உயர் இரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு, மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
இதன் காரணமாக உடல் அழுத்தத்தை குறைப்பது கடினமாகிறது மற்றும் மன அழுத்த ஹார்மோன்கள் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு மாறுகிறது மற்றும் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் எடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக, பசியின்மை, குளுக்கோஸ், வளர்சிதை மாற்றம் மற்றும் இன்சுலின் உணர்திறன் ஆகியவற்றில் வேறுபாடு உள்ளது. ஈஸ்ட்ரோஜன் குறைவதால், வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்குகிறது.
இந்த காரணங்களால் 45 வயதிற்குப் பிறகு, பெண்கள் உடல் எடையை குறைக்க கடினமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |