ட்ரம்பிற்கு நோபலை வழங்கியதன் பின்னணியில் பதவி ஆசை - நோபல் பரிசுகள் விற்கப்பட்டது ஏன்?
டிரம்ப்பிற்கு மச்சோடா தனது நோபல் பரிசை வழங்கியதன் பின்னணியில் உள்ள காரணம் குறித்தும், இதற்கு முன்னர் நோபல் பரிசுகளை ஏன் விற்பனை செய்தனர் என்பது குறித்தும் இந்த பதிவில் காணலாம்.
ட்ரம்பிற்கு நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ
பல நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
Getty / Chip Somodevilla
ஆனால், 2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு வழங்கப்பட்டது.
மரியா கொரினா மச்சாடோ நோர்வே செல்ல முடியாத சூழலில் அவரது மகள் சென்று பரிசை பெற்றார்.

Credit : AP
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி, வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைந்துள்ளது.
இந்த நிலையில், மரியா கொரினா மச்சாடோ டிரம்ப்பை சந்தித்து, தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை வழங்கியுள்ளார்.

Credit : X.com/whitehouse
மச்சாடோ அதை டிரம்ப்பிற்கு வழங்கினாலும், மரியா கொரினா மச்சாடோ தான் நோபல் பரிசு பெற்றவராக கருதப்படுவார். நோபல் பரிசை ஒருபோதும் மாற்ற முடியாது என நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவேன்
இந்த நிலையில் பேசிய மரியா கொரினா மச்சாடோ, "எனக்கு அதிகமான மக்கள் ஆதரவு உள்ளது. நான் வெனிசுலாவை சிறந்த நாடாக மாற்றுவேன்.

Credit : J. Scott Applewhite - AP
வெனிசுலாவின் முதல் பெண் ஜனாதிபதியாக ஆகுவேன் என நம்புகிறேன். சரியான நேரத்தில் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவேன் என தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் மூலம் எந்த வகையிலாவது வெனிசுலா ஜனாதிபதியாகிவிட வேண்டுமென்ற நோக்கத்திலே, டிரம்ப் நீண்ட காலமாக விரும்பிய நோபல் பரிசை அவருக்கு அளித்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Credit : nobelpeaceprize.org
இதே போல், நோபல் பரிசு சிலர் தங்கள் நோபல் பரிசை பணத்திற்காகவும் விற்பனை செய்துள்ளனர்.
போர் நிவாரணத்திற்காக
டென்மார்க்கை சேர்ந்த இயற்பியலாளர் நீல்ஸ் போர், அணுக்களின் அமைப்பு மற்றும் அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பற்றிய ஆய்வில் அவர் செய்த சேவைகளுக்காக 1922 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

Credit : wikipedia
பின்லாந்தின் மீதான சோவியத் படையெடுப்பிற்குப் பிறகு, 1940 ஆம் ஆண்டில் போர் நிவாரணத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஏலத்தில் விட்டார். அதை பெயர் குறிப்பிடாத ஒருவர் வாங்கி, பின்னர் அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.
இதே போல், நீல்ஸ் போரின் மகன் ஆஜ் போரும் 1975 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். அவரது நோபல் பதக்கம் 2011 ஆம் ஆண்டில் ஏலத்தில் விடப்பட்டது. மீண்டும் 2019 ஆம் ஆண்டில் 90,000 டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
ஆராய்ச்சிக்கு நிதி திரட்ட
டிஎன்ஏவின் அமைப்பை கண்டுபிடித்தற்காக 1962 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் வாட்சன் என்பவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜேம்ஸ் வாட்சன் தனது ஆராய்ச்சிக்கான நிதி திரட்டுவதற்காக, ரஷ்ய கோடீஸ்வரரான அலிஷர் உஸ்மானோவலுக்கு 4.7 மில்லியன் டொலருக்கும் அதிகமாக விற்றார். ஆனால், உஸ்மானோவல் பதக்கத்தை வாட்சனுக்கு பரிசாகத் திருப்பி அனுப்பினார்.
1962 ஆம் ஆண்டில் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற பிரான்சிஸ் கிரிக்கின் நோபல் பதக்கத்தை, 2013 ஆம் ஆண்டில், சீன உயிரி மருத்துவ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் வாங்கிற்கு 2.27 மில்லியன் டொலருக்கு அவரது குடும்பத்தினர் விற்றனர்.

Credit : Bebeto Matthews / AP
இந்த பணம் பிரான்சிஸ் கிரிக் நிறுவனம் மற்றும் அவர் பணியாற்றிய நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டது.
போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக
ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் 2021 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.

இந்த பதக்கத்தை, 103.5 மில்லியன் டொலருக்கு 2022ஆம் ஆண்டில் ஏலத்தில் விற்று, அந்த பணத்தை ரஷ்யா உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு யுனிசெப் மூலம் வழங்கினார்.
நாஜி ஆதரவு
நாஜி ஆதரவாளர்களில் ஒருவரான நோர்வே எழுத்தாளர் நட் ஹம்சன், 1920 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார்.

Credit : X.com
2ஆம் உலகப் போரின் போது ஆதரவளிக்கும் அடையாளமாக, ஜேர்மனியின் பிரச்சார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸுக்கு தனது நோபல் பதக்கத்தை வழங்கினார்.
மன ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு
விளையாட்டுக் கோட்பாட்டிற்காக அமெரிக்க கணிதவியலாளர் ஜான் நாஷ், 1994 ஆம் ஆண்டில் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

Credit : smithsonianmag.com
2015 ஆம் ஆண்டில் அவர் மறைந்த பின்னர், 2019 ஆம் ஆண்டில் அவரின் நோபல் பதக்கம் 7,35,000 டொலருக்கு ஏலத்தில் விடப்பட்டது.
இதன் மூலம் கிடைத்த பணம், ஜான் நாஷ் அறக்கட்டளையை நிறுவவும், அவரது பாரம்பரியத்தை ஆதரிக்கவும், மன ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |