பொதுவெளியில் தலைக்காட்டாத ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா காமேனி: பின்னணி காரணம்?
அமெரிக்கா உடனான மோதல் நிறைவடையும் வரை ஈரானின் உச்ச தலைவர் பொதுவெளியில் தோன்ற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவெளியில் தலைக்காட்டாத முஜ்தபா காமேனி
தந்தை அயதுல்லா அலி காமேனிக்கு பிறகு ஈரானின் உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஜ்தபா காமேனி அமெரிக்காவுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் முடியும் வரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது.
ஈரானின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சவுதி அரேபியாவின் அல்-அரேபியா ஊடகம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் முஜ்தபா காமேனியின் உருவம் பொறித்த பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அவர் நாட்டின் உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
குறிப்பாக அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை மற்றும் நாட்டின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி காமேனி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கில் கூட முஜ்தபா காமேனி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி காரணம்?

உச்சத் தலைவர் பொறுப்பில் இருக்கும் முஜ்தபா காமேனி பொதுவெளியில் தோன்றாமல் இருப்பதும், அவரின் தொடர்ச்சியான மவுனமும் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்நிலையில் தந்தை உயிரிழந்த தாக்குதலில் முஜ்தபா காமேனியும் படுகாயமடைந்து இருக்கலாம் அல்லது அவரின் உடல் சிதைந்திருக்கலாம் எனவே தான் பொதுவெளியில் அவர் இதுவரை தோன்றவில்லை என்று கருத்துகள் நிலவி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |