கேப்டன் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தார்? பின்னணியில் இருக்கும் ராசி எண்
2006 -ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு சுவாரஸ்யமான பிண்ணனி உள்ளது.
நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலை காலமானார். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அவரை பற்றிய விடயங்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில், விருத்தாச்சலம் தொகுதியை விஜயகாந்த் ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற செய்தியும் பரவி வருகிறது.
அரசியலில் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் சினிமாவை தவிர அரசியலிலும் உச்சத்தை தொட்டார். 2005 -ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினாா். பின்னர், 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கினார். அப்போது, திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் தான் எனக் கூறி சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
அவருக்கு வந்த கூட்டத்தையும், ஆதரவையும் பார்த்த திராவிட கட்சிகள் வியப்பில் இருந்தன. அப்போது திமுக கூட்டணியில் பாமக இருந்தது. அந்த நேரத்தில் விஜயகாந்துக்கு பாமக கட்சியோடு மோதல்கள் இருந்தது. நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, அவர்கள் அரசியலுக்கு வந்து எதையும் சாதிக்க முடியாது என பாமக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது.
இதனால், பாமகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த் சவால் விடுத்தார். அப்போது திமுக மீதும் தேமுதிக அதிருப்தியில் இருந்தது.
விருத்தாச்சலம் தொகுதி
இதற்காக சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட தேர்ந்தெடுத்த தொகுதி தான் விருத்தாச்சலம். ஆனால், அங்கு பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை விட அதிக வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து, அடுத்த சட்டமன்ற தேர்தலியேயே எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தை விஜயகாந்த் பெற்றார்.
விருத்தாசலம் தொகுதியை விஜயகாந்த் தேர்ந்தெடுத்தது ஏன் என்று பார்க்கும் போது, விஜயகாந்துக்கு கடவுள் பக்தி அதிகம் உண்டு. அவருடன் இணைந்து தோ்தல் பணியாற்றியவா்கள் கூறும்போது, எண் 5 அவருக்கு ராசியாகக் கருதப்படுகிறது.
இதனால், தமிழகத்தில் 5 கோபுரங்களைக் கொண்ட கோயிலான விருத்தகிரீஸ்வரா் கோயில் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இதனால், தனது ராசிக்கான ஊராக விருத்தாச்சலத்தை விஜயகாந்த் தேர்ந்தெடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |