முதலமைச்சர் ஸ்டாலினின் டுவிட்டை நீக்கியது ஏன்? ராணுவம் விளக்கம்
இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்ற தமிழக பெண்ணை வாழ்த்திய முதல்வர் முக ஸ்டாலின் பதிவை நீக்கியது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ராணுவம்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்தவர் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா, ராணுவ செவிலியர் சேவையில் இருந்து மேஜர் ஜெனரல் என்ற மதிப்புமிக்க பதவிக்கு உயர்ந்துள்ளார்.
இதுகுறித்து ராணுவத்தின் வடக்கு தலைமையகம் புதன்கிழமை டுவிட்டரில் செய்தி வெளியிட்டது.
இதனை மறுபகிர்வு செய்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை @NorthernComd_IA ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 2, 2023
Why should @NorthernComd_IA delete the tweet of The Chief Minister of Tamil Nadu congratulating the… https://t.co/yoz2KD3jdW
இந்த பதிவை ராணுவத்தின் வடக்கு தலைமையகம் நீக்கியது, இதுகுறித்து கனிமொழி எம்பி கேள்வி எழுப்ப தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, முதல் பெண் ஜெனரல் குறித்த செய்தியை ராணுவ தலைமையகம் பகிர்வதற்கு முன்பாவே வடக்கு தலைமையகம் பகிர்ந்ததால் டுவிட் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Congratulating our Brigadier Military Nursing Service on her promotion to the rank of Major General.#DhruvaCommand congratulates Major General Ignatius Delos Flora, for achieving the prestigious rank of Major General in #IndianArmy's esteemed Military Nursing Service (#MNS).… https://t.co/coWuIoNjo0
— NORTHERN COMMAND - INDIAN ARMY (@NorthernComd_IA) August 3, 2023