ஹொட்டலில் நுழைந்தவுடன் ரூம் லைட்டை ஏன் ஆன் செய்யக் கூடாது தெரியுமா?
ஹொட்டலுக்கு சென்றால் முதலில் நீங்கள் ரூம் லைட்டை ஆன் செய்யக் கூடாது. அதற்கான காரணங்கள் இந்த பதிவில்.
என்ன காரணம்?
தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, நீங்கள் முதல் முறையாக உங்கள் அறைக்குள் நுழைந்தவுடன், குறைந்தபட்சம் சில நிமிடங்களுக்கு விளக்கை இயக்கக்கூடாது.
ஏனென்றால், விளக்கை இயக்குவதைத் தவிரத்தால் உங்கள் அறையில் மறைந்திருக்கும் படுக்கைப் பூச்சிகளை கண்டறிய முடியும்.
படுக்கைப் பூச்சிகள் என்பது ஹொட்டல் அறைகளில் காணப்படும் சிறிய இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகள். அவை மெத்தைகள், திரைச்சீலைகளில் மறைந்து இருக்கலாம்.
அறிக்கைகளின்படி, 2022 மற்றும் 2024 க்கு இடையில் படுக்கைப் பூச்சி தொற்றுகள் 35% அதிகரித்துள்ளன, இதற்கு முக்கிய காரணம் உலகளாவிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பாகும்.
சமீபத்தில், @haleewithaflair என்ற பயனர் பெயரில் ஹொட்டல் ஊழியர் ஒருவர் படுக்கைப் பூச்சிகளை கண்டறிவதற்கு உங்கள் அறையை இருட்டாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
மேலும், மொபைல் டார்ச்லைட்டை மட்டும் பயன்படுத்தவும், சிறிது நேரம் லைட்டை இயக்கவோ அல்லது திரைச்சீலைகளை இழுக்கவோ கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
உங்கள் அறையில் படுக்கைப் பூச்சிகள் மறைந்திருப்பதை கண்டால் பைகளை அவிழ்க்காமல் இருப்பது அவசியம். பின்னர், தாமதிக்காமல், ஹோட்டலின் முன் மேசைக்கு புகாரளிக்கவும்.
பெரும்பாலான ஹொட்டல்கள் உங்களை வேறு அறைக்கு மாற்றும் அல்லது பணத்தைத் திரும்பப் பெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |