வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவனால் மனைவி மரணம்.., 5-வது குழந்தையை பெற்றெடுக்கும் போது சோகம்
5-வது குழந்தையை பெற்றெடுக்கும் போது மனைவிக்கு வீட்டிலேயே கணவர் பிரசவம் பார்த்துள்ளார்.
மனைவி மரணம்
இந்திய மாநிலமான கேரளா, ஆலப்புழா பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிராஜூதீன் மற்றும் அஸ்மா (35). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில் அஸ்மா மீண்டும் கர்ப்பமானார்.
இதில், முதல் மற்றும் இரண்டாவது குழந்தை மருத்துவமனையில் பிறந்துள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது குழந்தை வீட்டிலேயே பிறந்துள்ளது.
இதனால், 5-வது குழந்தையையும் வீட்டிலேயே பிரசவம் பார்க்க கணவன் மனைவி முடிவு செய்தனர். அதற்காக அக்கம் பக்கத்தினருக்கு கூட கர்ப்பம் ஆன விடயம் தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று அஸ்மாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு 5-வது குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்தின் போது அஸ்மா பரிதாபமாக இறந்துவிட்டார். அவருக்கு பிறந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பிரசவத்தின் போது அஸ்மாவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டும் கூட அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |