கணவனின் பிறப்புறுப்பை வெட்டி வீசி கொலை செய்த மனைவி: ஸ்பெயினில் கொடூரம்: நடந்தது என்ன?
ஸ்பெயினில் பெண்மணி ஒருவர் தன்னுடைய கணவரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் பயங்கரம்
கடந்த ஜனவரி 30ம் திகதி ஸ்பெயினின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பில்போ என்ற நகரில் 55 வயது பெண்மணி ஒருவர் தன்னுடைய 67 வயது கணவரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்மணியின் மகள் அளித்த தகவலின் படி, பில்போ-வின் உரிபாரி பகுதியில் உள்ள வீட்டிற்கு விரைந்த பொலிஸார் சம்பவ இடத்தில் ஆண் ஒருவர் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு பலமுறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
கடந்த 5 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வரும் இந்த தம்பதி உள்ளூரில் பார் ஒன்றை நடத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி பயங்கர சண்டை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்து பொலிஸார் அந்த வீட்டிற்கு சென்ற போது அந்த பெண்மணியும் அங்கே இருந்துள்ளார்.

அவர் கொலை குற்றச்ச்சாட்டிற்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம்
பொலிஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இதுவரை கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை.
அக்கம்பக்கத்தினர் வழங்கிய தகவலில், கொலை செய்யப்பட்ட நபர் அந்த பெண்ணை ஏமாற்றி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |